லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘தளபதி 64’. இதில் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘கைதி’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளார்.
![Thalapathy 64 update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4893153_2.jpg)
ஆண்ட்ரியா கடைசியாக ‘வடசென்னை’ படத்தில் சந்திரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக அவர் சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். ‘கா’ என்னும் படத்தில் வன்விலங்கு புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார். அந்தத் திரைப்படம் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.