’நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச். வினோத் - அஜித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்து முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தயாரிப்பு நிறுவனமான ’பே வியூவ் ப்ராஜெக்ட்ஸ்’ (BayView Projects) இதனை தயாரிக்கிறது.
தல 60 என்று தற்காலிக பெயரிடப்பட்ட படத்தின் படபூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த படத்தில் அஜித்தின் லுக் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஸ்வாசம், நேர்க்கொண்ட பார்வை படத்தில் வெள்ளை முடி தாடியுடன் நடித்திருந்தார். தல 60 படத்திற்காக உடம்பை குறைத்து ஸ்லிம்மாகி வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அஜித் விமானநிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அஜித் மீசையை குறைத்து, முடியை குறைத்து கலரிங் செய்து புதிய கெட்அப்பில் உள்ளார். இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே '#THALA60LatestPics' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: தல 60 அப்டேட்: அன்புத் தந்தை - ஆக்ரோஷமான போலீஸ்!