ETV Bharat / sitara

'தேன்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு - மகிழ்ச்சியில் படக்குழு

author img

By

Published : Jun 28, 2021, 8:20 AM IST

'தேன்' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்துப் படத்தின் தொகுப்பாளர் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

தேன்
தேன்

நடிகர் தருண்குமார் நடிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் சமீபத்தில் சோனி லைவ்வில் வெளியான திரைப்படம் 'தேன்'.

மலைக்கிராமங்களில் கார்ப்பரேட் நிறுவனம் நுழைந்தால், அவர்களின் நிலை என்னவாகும் என்பதே படத்தின் கதை.

பல்வேறு விருதுகளை வென்றுள்ள இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நன்றி தெரிவித்த படத்தொகுப்பாளர்

இந்நிலையில் 'தேன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்துப் படத்தின் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தேன் திரைப்படம் சோனி லைவ்வில் வெளியான நாள் முதல், பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியானது 'தேன்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.