ETV Bharat / sitara

தெலுங்கில் 'தடம்' பதித்த 'ரெட்' பட முன்னோட்ட காட்சி! - ரெட் திரைப்பட டீஸர்

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி நடித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ரெட்' பட முன்னோட்ட காட்சி (டீஸர்) வெளியானது.

Red movie teaser
Ram Pothineni in Red movie
author img

By

Published : Feb 29, 2020, 2:32 AM IST

தமிழ் சூப்பர் ஹிட் 'தடம்' ரீமேக்காக தெலுங்கில் உருவாகி இருக்கும் 'ரெட்' படத்தின் முன்னோட்ட காட்சி (டீஸர்) வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகரான ராம் போத்தினேனி, நிவேதா பெத்துராஜ், மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர் என பலர் நடித்துள்ள படம் 'ரெட்'.

ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை திருமலா கிஷோர் இயக்கியுள்ளார். படத்துக்கு இசை - மணிஷர்மா.

ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தமிழில் அருண்விஜய் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான 'தடம்' படத்தின் ரீமேக்காக 'ரெட்' திரைப்படம் உருவாகியுள்ளது.

கொலையும் அதன் பின்னணியில் இருக்கும் விறுவிறுப்பான திருப்பங்களையும் கொண்ட கதையம்சத்தில் 'தடம்' படம் அமைந்திருக்கும்.

தமிழில் வித்யா பிரதீப் ஏற்று நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் தெலுங்கில் நடித்துள்ளார்.

ஏற்கனவே தமிழில் ஹிட்டான 'ராட்சசன்' தெலுங்கில் 'ராட்சசடு' என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து தமிழில் ஹிட்டான மற்றொரு திரில்லர் படமான 'தடம்' ரீமேக்கான ரெட் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தடம்' இந்தியிலும் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்குகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.