ETV Bharat / sitara

#TerminatorDarkFate டிரெய்லர் வெளியிட்ட ஆர்யா

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடிப்பில் 'டெர்மினேட்டர் டார்க் ஃபேட்' திரைப்படம் அடுத்த மாதம் வரவிருக்கிறது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தமிழ் டிரெய்லரின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்துக்கொண்டு டிரெய்லரை வெளியிட்டார்.

author img

By

Published : Oct 22, 2019, 10:59 PM IST

Terminator Dark Fate trailer launch event

உலகமெங்கிலும் டெர்மினேட்டர் படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய 'டெர்மினேட்டர்' படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் நடிகர் அர்னால்ட். உலகில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் 'டெர்மினேட்டர்' முதல் பாகமும் இரண்டாம் பாகமும் உள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பின் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்திருக்கும் 'டெர்மினேட்டர் டார்க் ஃபேட்' (Terminator Dark Fate) படத்தில் டெர்மினேட்டராக மீண்டும் நடித்துள்ளார் அர்னால்ட். இந்த ஆண்டு இப்படத்தினை இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ் (Fox Studios) வெளியிடவுள்ள நிலையில், இதன் தமிழ் டிரெய்லரின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டார்.

டெர்மினேட்டர் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்யா

இதனையடுத்து பேசிய ஆர்யா, அர்னால்ட் நடித்த டெர்மினேட்டர் திரைப்படம் உலகம் முழுக்க பிரபலம், அவரின் படத்தின் டிரெயலரை நான் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி என்றார். ஸ்டாராக இருப்பதால் மட்டும் அர்னால்ட் பிரபலம் கிடையாது. அதற்கு காரணம் அவருடைய பாடி பிஸிக் தான். அன்றைய காலகட்டத்திலேயே அவர் ஏழு முறை உலக அழகன் பட்டம் வென்றவர். உலகம் முழுக்க 'அர்னால்ட் ஜிம் ஒர்கவுட்' என்றே நிறைய இருக்கிறது. இதை சாதிப்பது சாதாரணம் கிடையாது. உலகம் முழுக்க இருக்கிற இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று அர்னால்டை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இதையும் படிங்க: விமர்சனங்களுக்கு 'END CARD' போட்ட ப்ளூ சட்டை!

Intro:மீண்டும் அர்னால்டின்
டெர்மினேட்டர் டார்க் ஃபேட்.(Terminator Dark Fate )Body:உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது.

உலகமெங்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. உலகில் அதிக வசூல் குவித்த படங்களில்
Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் உள்ளது. இந்த இரண்டு பாகங்களையும் இயக்குனர் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் அவர் தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் Terminator ஆக Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிட உள்ள நிலையில்.
இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டுு பேசினார்

அர்னால்ட் நடித்த டெர்மினேட்டர் உலகம் முழுக்க ஃபேமஸ். அவரோட டிரெயலர் நான் வெளியிடறது சந்தோஷம். அர்னால்டின் பயங்கர ஃபேன். True lies, Conan the barbarian, terminator என எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

ஸ்டார இருக்கறதால மட்டும் அவர் ஃபேமஸ் கிடையாது அதற்கு காரணம் அவரோட பாடி பிஸிக் தான் காரணம். அப்பவே அவர் 7 முறை உலக அழகன் பட்டம் வாங்கிடார். உலகம் முழுக்க அர்னால்ட் ஜிம் ஒர்கவுட்னே நிறைய இருக்கு இத சாதிக்கறது சாதாரணம் கிடையாது. உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.

Conclusion:இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.