தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நவ்யா சுவாமி. இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக நவ்யா அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது இவர் நடித்து வந்த, ’நா பேரு மீனாட்சி’ தெலுங்கு தொடரின் நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவி கிருஷ்ணா, "எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன்.
எனக்கு கரோனா தொற்று வந்தது கவலையில்லை. என்னோடு ’நா பேரு மீனாட்சி’ தொடரில் நடித்த, எனது நண்பர்கள் அனைவரையும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.