பிரபுதேவா நடித்துவரும் த்ரில்லர் படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தேவி படம் மூலம் நடிப்புக்கு மீண்டும் திரும்பினார் பிரபுதேவா. படம் சூப்பர் ஹிட்டான நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார்.
அந்த வகையில், அறிமுக இயக்குநர் விஎஸ் இயக்கத்தில் ஊமை விழிகள் என்ற படத்தில் நடித்துவருகிறார் பிரபுதேவா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இப்படத்தில் தெலுங்கில் ஹீரோவாக ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீகாந்த் இளைய மகன் ரோஹன், பிரபுதேவாவின் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதன்மூலம் தமிழில் அவர் நடிகராக அறிமுகமாகிறார். படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.

திகில் கலந்த த்ரில்லர் பாணியில் ஊமை விழிகள் படம் உருவாகிவருகிறது.