தமிழ் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. இவர் 'பிக்பாஸ் சீசன் 4' இல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
அறுவை சிகிச்சை
அதிலும் அவர் அந்நிகழ்ச்சியில், 'அன்பு தான் ஜெயிக்கும்' எனப் பேசிய வசனம் சமூகவலைதளத்தில், வைரலாகி மீம்ஸ்களாக வலம் வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அர்ச்சனாவுக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு பிரச்சனை ஏற்பட்டது.
![VJ archana](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12893496_achu-2.jpg)
இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து தற்போது அர்ச்சனா தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
ரசிகர்களுடன் கலந்துரையாடல்
இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் முதன் முதலாக அர்ச்சனா, நேற்று (ஆகஸ்ட்.26) தனது சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். எப்போது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவீர்கள் என ரசிகர்கள் கேட்டனர்.
அதற்கு அர்ச்சனா பதில் அளித்தாவது, "நீங்கள் கேட்டுக்கொண்டால் இப்போதே நான் வரத் தயார். ஆனால் என்னுடைய வலது கால் தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தோல், தசைகளை வெட்டி எடுத்து அதை என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
![VJ archana](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12893496_achu-1.jpg)
படப்பிடிப்புக்கு சென்றால் அங்கு 15, 16 மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும். என் கால்கள் இன்னும் பலவீனமாக இருக்கிறது. எனவே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சில நாட்கள் ஆகும். செப்டம்பர் 3ஆம் தேதி எனக்கு ஒரு பரிசோதனை உள்ளது. அதன் பிறகு செப்டம்பர் 10 தேதி முதல் மீண்டும் வருவேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனையிலிருந்து வீல் சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா