தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், கரோனா ஊரடங்கால் அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர ஈஎம்ஐ செலுத்த முடியாததால், நிதி நிறுவனம் அவர்களின் ஆட்டோவை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரக் கோரி, நடிகர் சோனு சூட்டிடம், அச்சிறுவன் உதவி கேட்க முயன்றுள்ளார். அதன்படி தெலுங்கானா மாநிலத்திலிருந்து, சிறுவர் வெங்கடேஷ் மும்பைக்கு நடந்தே சென்றுள்ளார். கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய இவரது பயணம் சுமார் எட்டு நாள்கள் நீடித்துள்ளது.
இதுகுறித்து அச்சிறுவன் கூறுகையில், “நடிகர் சோனு சூட் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். உண்மையில் அவர் ஒரு கடவுள் தான். எங்களுக்கு ஆட்டோவை விட்டால் வேறு வழி இல்லை. சோனு சூட் எங்களுக்கு உதவி செய்வார் என நம்பி தான் 4000 கிலோ மீட்டர் மும்பை வந்து இருக்கிறேன்.
எட்டு நாள்களாக நடந்துவந்த நான் இரவில் கோயிலில் தூங்குவேன். எனக்கு அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நயன்தாராவின் 'இதுவும் கடந்து போகும்' பாடல் வெளியீடு