ETV Bharat / sitara

ஓடிடி தளத்தில் வெளியாகும் ஆர்யா திரைப்படம்?

author img

By

Published : Dec 10, 2020, 10:27 AM IST

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள, ’டெடி’ திரைப்படம் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யா
ஆர்யா

'மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சாயிஷா நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஏற்கனவே நடந்துமுடிந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. இதையடுத்து தற்போது, ‘டெடி’ திரைப்படம் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஆர்யா- சாயிஷா இணைந்து நடித்த படம் ‘டெடி’ என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆத்மார்த்தம்...அற்புதம்...குறிப்பிடத்தக்க வித்தியாசம்: ஷங்கர் ரசித்த படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.