நடிகர் விக்ரம் தற்போது 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சியான் 60' படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார்.
லலித் குமார் 7 கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
'சியான் 60' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையிலிருந்து டார்ஜிலிங்குக்கு விமானத்தில் சென்றனர்.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை அறிந்த விமானி படக்குழுவினரை பத்திரமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கினார்.
இதையடுத்து ஜூலை 31ஆம் தேதி மீண்டும் 'சியான் 60' படக்குழுவினர் சென்னையிலிருந்து டார்ஜிலிங் சென்றுள்ளனர். தற்போது அங்கு படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: 'கோப்ரா'வை முந்தும் 'சீயான் 60' - தலையசைப்பாரா தயாரிப்பாளர்...?