ஊரடங்கு உத்தரவால் சல்மான் கான் தன் குடும்பத்துடன் மஹாராஷ்டிராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையில் அங்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து, ‘தேரே பீனா' என்ற மியூசிக் வீடியோவிற்கான ஷுட்டிங்கை நடத்தி முடித்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
மேலும் அவரே பாடியுள்ள இப்பாடலின் வீடியோ விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். இந்நிலையில் அப்பாடலின், டீஸரை சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சுமார் 32 நொடி உள்ள அந்த டீஸர் முழுவதிலும், சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அற்புதமாக நடித்துள்ளனர்.
-
Tere bina... wishing all mothers a v happy Mother’s Dayhttps://t.co/xWPluF2nDe@Asli_Jacqueline #AjayBhatia @Musicshabbir @adityadevmusic @abhiraj21288 #SaajanSingh#TereBinaTeaser
— Salman Khan (@BeingSalmanKhan) May 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tere bina... wishing all mothers a v happy Mother’s Dayhttps://t.co/xWPluF2nDe@Asli_Jacqueline #AjayBhatia @Musicshabbir @adityadevmusic @abhiraj21288 #SaajanSingh#TereBinaTeaser
— Salman Khan (@BeingSalmanKhan) May 10, 2020Tere bina... wishing all mothers a v happy Mother’s Dayhttps://t.co/xWPluF2nDe@Asli_Jacqueline #AjayBhatia @Musicshabbir @adityadevmusic @abhiraj21288 #SaajanSingh#TereBinaTeaser
— Salman Khan (@BeingSalmanKhan) May 10, 2020
சல்மான் பாடியுள்ள இப்பாடலை ஷபீர் அகமது எழுதியுள்ளார். மேலும் நாளை வெளியாகவுள்ள இப்பாடல் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 'ரத்த கறையுடன் சுத்தியல்'- விஷ்ணு விஷாலின் த்ரில்லர் பட டீஸர் வெளியீடு!