பிரபல அமெரிக்கப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் பாடல்கள் மூலம் உலகெங்கும் இருக்கும் இசை ரசிகர்களை ஈர்த்தவர். இவரது இசை ஆல்பம் இளைஞர்களை வெகுவாக கவரும் வகையில் இருந்து வருகிறது.
டெய்லர் ஸ்விஃப்ட்டின் நாட்டுப்புறவியல் ஆல்பமான 'ஃபோக்ளோர்' 2020 தற்போது ஒரு மில்லியன் பிரதிகள் விற்ற முதல் ஆல்பம் என்ற சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் பில்போர்டு 200 தரவரிசையில், தொடர்ச்சியாக எட்டு வாரங்களுக்கு டெய்லர் ஸ்விஃப்ட்டின் இந்த ஆல்பம் முதலிடத்தை பிடித்துள்ளது.
அதுமட்டுமல்லாது இந்த ஆல்பம் தற்போது மொத்த 1.038 மில்லியன் விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டு ஒரு மில்லியனை தாண்டி விற்பனையான முதல் ஆல்பம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஜூலை 24ஆம் தேதி ஃபோக்ளோர் ஆல்பம் குறித்தான அறிவிப்பு வெளியாகி ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது. இதற்கு முன்பு இந்த தரவரிசையில் ஸ்விஃப்ட்டின் கடைசி ஆல்பமான 'லவர்', 2019 இல் அமெரிக்காவில் ஒரு மில்லியனை கடந்து விற்ற ஒரே ஆல்பமாகும்.
இதையும் படிங்க: வாழ்க்கையில் தவறு செய்வது சகஜம்தான் - விருது வென்ற அமெரிக்க பாப் பாடகி பேச்சு