அமெரிக்க இசை விருதுகள் (American Music Awards) வழங்கும் விழாவில் பிரபல இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விப்டுக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் அவர் மொத்தமாக 28 விருதுகளை பெற்றுள்ளார். பாப் உலகின் ராஜா மைக்கேல் ஜாக்சன் அதிகபட்சமாக 24 விருதுகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை டெய்லர் ஸ்விப்ட் முறியடித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த இசைக் கலைஞர், சிறந்த பெண் கலைஞர், மக்கள் மனம்கவர்ந்த பாடல், சிறந்த மியூசிக் வீடியோ, இளைஞர்களுக்கு பிடித்த சமகாலக் கலைஞர் ஆகிய பிரிவுகளில் டெய்லர் ஸ்விப்டுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாப்ட் தியேட்டரில் இந்த விழா நடைபெற்றது.