பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் சிஃப்ட் பாடல்கள் உலகெங்கும் இருக்கும் இசை ரசிகர்களை ஈர்த்தவர். இவருடைய ‘யு பிலாங் வித் மீ’ (you belong with me) என்னும் இசை ஆல்பத்தால் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் தி ஆர்ச்சர் என்னும் பாடல் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வருகிறது.
![தி ஆர்ச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3928445_archer.jpg)
இந்த பாடலில் நண்பர்களையும் நம்புவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் எழுதியுள்ளது ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த பாடல் குறித்து டெய்லர் சிஃப்ட் பேசுகையில், 'லவ்வர் ஆல்பத்தின் முக்கிய பாடலை வெளியிட்டுள்ளேன். இதற்கான வீடியோ வேலைகளை இனி தான் தொடங்க வேண்டும்' என்றார்.