கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடித்து திரையரங்குகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து திரையரங்கத்தின் ஊழியர்கள் திரையரங்குகளைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கும் மேலாக திரைப்படங்கள் வெளிவராத நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்குப் புதிய படங்கள் வெளியாகுவது குறித்து கேள்வியெழுந்துள்ளது.
இருப்பினும் நாளை (நவம்பர் 10) தமிழ்நாட்டில் திரையரங்குள் திறப்பதையொட்டி வெளியாகும் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தாரளபிரபு, ஓ மை கடவுளே, மை ஸ்பை (my spy), ஹிட் (Hit), பிஷ்மா (bheeshma), 1917, ஜோக்கர் (Joker) போன்ற படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.