சென்னை சர்வதேச திரைப்பட விழா (Chennai International Film Festival, CIFF) சென்னையில் வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்து.
இவ்விழாவை இந்தியத் திரைப்படச் சங்கம், ஐசிஏஎஃப் ஆகியவை தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்துகின்றன. உலக அளவில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து இந்த விழாவின் போது திரையிடுவது வழக்கம். அந்த வகையில் 17ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த விழா வரும் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படவிருக்கும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை ஐசிஏஎஃப் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த சாட்டை, அசுரன், பக்ரீத், ஹவுஸ் ஓனர், ஜீவி, கானா, மெய், ஒத்த செருப்பு சைஸ் 7, பிழை, சீதக்காதி, சில்லுக் கருப்பட்டி, தோழர் வெங்கடேசன் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
'பிராவோவுடன் பணிபுரிந்தது ஸ்பெஷல் அனுபவம்'- நடனக் கலைஞர் பெருமிதம்