தமிழ் சினிமாவில் நடிகை ராய் லட்சுமி 'கற்க கசடற' படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து 'தாம் தூம்', 'மங்காத்தா', 'வாமனன்', 'முத்திரை', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், 'ஜான்சி ஐபிஎஸ்' என்ற கன்னட திரைப்படத்தில் காவல் துறை உயர் அலுவலராக நடித்துள்ளார். ராய் லட்சுமியுடன் ஸ்ரீஜித், முகேஷ் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி.வி.எஸ். பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தை ராஜேஷ் குமார் தயாரித்துள்ளார்.
ராய் லட்சுமி படங்களில் நடித்துவந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் வெளியில் சென்று புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில், ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்லோ மோஷனில் நடந்துவரும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.