விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் '96'. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் '96' திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
-
Jaanu!!! Trailer is out!!https://t.co/nnZ1DTkKTK@Samanthaprabhu2 @govind_vasantha @Premkumar1710
— Chinmayi Sripaada (@Chinmayi) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jaanu!!! Trailer is out!!https://t.co/nnZ1DTkKTK@Samanthaprabhu2 @govind_vasantha @Premkumar1710
— Chinmayi Sripaada (@Chinmayi) January 9, 2020Jaanu!!! Trailer is out!!https://t.co/nnZ1DTkKTK@Samanthaprabhu2 @govind_vasantha @Premkumar1710
— Chinmayi Sripaada (@Chinmayi) January 9, 2020
இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் '99' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும் கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கில், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி பாத்திரத்தில் ஷ்ரவானந்தும் நடித்துள்ளனர். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்கியுள்ளார்.
தமிழில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தின் பெயரான ஜானு என்ற பெயரையே இப்படத்திற்கு சூட்டியுள்ளனர். ’96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இதற்கும் இசையமைக்கிறார். தில் ராஜு படத்தை தயரித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் போன்று தெலுங்கிலும் இப்படம் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.