பிரகாஷி தோமர், சந்திரோ தோமர் என்னும் வயதான துப்பாக்கிச் சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘சாண்ட் கி ஆங்’ (Saand Ki Aankh). துஷர் ஹிராநந்தனி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜக்தீப் சித்து வசனம் எழுதியுள்ளார். அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்துக்காக டாப்சியும் பூமி பட்னேகரும் ‘ஷூட்டிங் பாட்டிகளை’ சந்தித்து பயிற்சி பெற்றனர். பாலிவுட்டில் பயோகிராபி (வாழ்க்கை வரலாறு) படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. சர்ப்ஜித், பாக் மில்கா பாக், பேண்டிட் குயின் என அதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் தவிர்க்க முடியாத வெற்றிப்படமாக ‘சாண்ட் கி ஆங்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரோ தோமராக பூமி பட்னேகரும், பிரகாஷி தோமராக டாப்சியும் நடித்துள்ள இப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து அனுராக் கஷ்யப் தயாரித்துள்ளார். இந்நிலையில் சாண்ட் கி ஆங் திரைப்படத்துக்கு ராஜஸ்தான் மாநில அரசு ஜிஎஸ்டி வரி விலக்களித்துள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
இதையும் வாசிங்க: #SaandKiAankh - அவமானங்கள் தந்த வெற்றி: ஷூட்டிங் பாட்டிகளின் வரலாறு