ETV Bharat / sitara

ட்ரெய்லர் மீது புகார் தெரிவியுங்கள் - தப்பட் ட்ரெய்லரில் அழைப்பு விடுக்கும் டாப்ஸி!

author img

By

Published : Feb 12, 2020, 7:41 PM IST

டாப்ஸி நடித்துள்ள தப்பட் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் பார்வையாளர்களுடன் உரையாடும் டாப்ஸி, ட்ரெய்லர் மீது புகார் தெரிவிக்கும்படி பார்வையாளர்களை நோக்கி அழைப்புவிடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

டாப்ஸி பன்னு
தப்பட் ட்ரெய்லரில் நடிகை டாப்ஸி பன்னு

பிரபல நடிகை டாப்ஸி பன்னு நடிப்பில், வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தப்பட்.

திருமண உறவில் துணைவரின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்து பேசும் இந்தத் திரைப்படத்தின் முதல் ட்ரெய்லர், கடந்த மாத இறுதியில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இதன் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் முந்தைய ட்ரெய்லரில் இடம்பெற்ற டாப்ஸியின் கணவர் அவரை அறையும் காட்சிகளும், அதைத் தொடர்ந்து பார்வையாளர்களுடன் டாப்ஸி உரையாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பார்வையாளர்களுடன் உரையாடும் டாப்ஸி, இதுபோன்று திருமண உறவில் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், ட்ரெய்லரை அதிகளவு ரிப்போர்ட் செய்யக்கோரி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆர்ட்டிக்கிள் 15, மல்க் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹா இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரத்னா பதக் ஷா, மனவ் கௌல், தியா மிர்சா, தன்ஸ் அஸ்மி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: டாப்சியின் 'தப்பட்' பட ட்ரெய்லர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.