ETV Bharat / sitara

சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கும் டாப்சி - ப்ளெர் ஃபர்ஸ்ட் லுக்

நடிகை டாப்சி, தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் தான் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

டாப்சி
டாப்சி
author img

By

Published : Jul 16, 2021, 4:01 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் பிஸியாக நடித்துவருபவர் நடிகை டாப்சி. இவர் நடிப்பில் கடைசியாக இந்தியில் ஹசீன் திஸ்ரூபா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதற்கிடையில் அவுட்சைடர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை டாப்சி தொடங்கியுள்ளார். அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திலும் அவரே நடிக்கிறார். 'ப்ளர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அவுட்சைடர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸீ நிறுவனமும் தயாரிக்கிறது.

'ப்ளர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை டாப்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது கண்களை யாரோ துணியால் கட்டிவிட்டு, கையை வைத்து மூடுவது போல் அமைந்துள்ளது.

நாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை அஜய் இயக்குகிறார். கதை, திரைக்கதையை பவன் சோனி எழுத, இப்படம் வரும் 2022ஆம் ஆண்டு வெளியாகிறது.

டாப்சி வெளியிட்ட பதிவு
டாப்சி வெளியிட்ட பதிவு

இதுகுறித்து டாப்சி கூறுகையில், "என்ன தான் நான் படங்களில் நடித்து வந்தாலும், படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதனால் இந்த முடிவை யோசிக்காமல் எடுத்து விட்டேன். எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தீபாவளி: மக்களை மகிழ்விக்க களமிறங்கும் சூப்பர்ஸ்டார்-தல?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.