சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. இதில் விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், ஜகபதி பாபு, அனுஷ்கா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி ராஜபாண்டி என்னும் தமிழ் மன்னனின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கு படக்குழு தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியிருந்தது. இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழு யு/ஏ சன்றிதழ் வழங்கியது.
-
Certified U/A! Censor done with no cuts... MEGA RELEASE worldwide on October 2nd. Are you ready to see high octane action unleash on screen? @DirSurender #RamCharan #MegastarChiranjeevi #SyeRaa #SyeRaaOnOct2nd #SyeRaaNarasimhaReddy pic.twitter.com/H2ndK3kQbz
— Konidela Pro Company (@KonidelaPro) September 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Certified U/A! Censor done with no cuts... MEGA RELEASE worldwide on October 2nd. Are you ready to see high octane action unleash on screen? @DirSurender #RamCharan #MegastarChiranjeevi #SyeRaa #SyeRaaOnOct2nd #SyeRaaNarasimhaReddy pic.twitter.com/H2ndK3kQbz
— Konidela Pro Company (@KonidelaPro) September 23, 2019Certified U/A! Censor done with no cuts... MEGA RELEASE worldwide on October 2nd. Are you ready to see high octane action unleash on screen? @DirSurender #RamCharan #MegastarChiranjeevi #SyeRaa #SyeRaaOnOct2nd #SyeRaaNarasimhaReddy pic.twitter.com/H2ndK3kQbz
— Konidela Pro Company (@KonidelaPro) September 23, 2019
மேலும் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அலுவலர்கள் படத்திலிருந்து ஒரு காட்சியைக் கூட நீக்கம் செய்யாமல் படத்தை அப்படியே படக்குழுவுக்கு அனுப்பிவைத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சைரா நரசிம்மா ரெட்டி'யிடம் ஆசி பெற்ற ராஜ பாண்டி!