பாலிவுட் திரையுலகில் சமகாலத்தின் சிறந்த நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் இர்ஃபான் கான். குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஆனாலும் சரி, கதாநாயகன் வேடமானாலும் சரி தனது தனித்துவமான நடிப்பாற்றலின் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இர்ஃபான் கொண்டிருந்தார்.
முன்னதாக நியூரோ எண்டோக்ரை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இர்ஃபான் கான், தனது 54ஆவது வயதில், சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மும்பை மருத்துவமனையில் காலமானார். இது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இர்ஃபானுக்கு சுதாபா சிக்தர் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், இர்ஃபானின் மனைவி சுதாபா சிக்தர், தனது கணவர் இர்ஃபான் உயிரிழந்து ஓராண்டுக்கு மேலாகியும் அவரது படங்களை இன்றளவும் தன்னால் பார்க்க முடியவில்லை என கனத்த மனதுடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரேடியோ சானல் ஒன்றின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய சுதாபா, அவருடைய ’பான் சிங் தோமர்’ படத்தை மட்டும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட காரணத்தால் பார்த்தேன். அவரது படங்களை பார்க்கும்போது அவர் இல்லாத உண்மை எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இர்ஃபான் - சுதாபா தம்பதியின் மகன் காபில் விரைவில் காலா எனும் பாலிவுட் திரைப்படத்தின் வழியே அறிமுகமாக உள்ள நிலையில், ”பாபில் ஏற்கனவே தன் தந்தை இல்லாத வருத்தத்தில் உள்ளார். அவர் நிச்சயம் இர்ஃபானுடன் ஒப்பிடப்படுவார். கேலிக்கும் ஆளாகலாம். பாபிலை இவற்றில் எல்லாமிருந்து பாதுகாக்க நான் விரும்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ’ராஜேஷ் கண்ணா’ நினைவு நாள்!