மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் இறுதி உடற்கூறு ஆய்வு அறிக்கையை மும்பை காவல் துறையினரிடம் ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு கையெழுத்திட்டு சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், உடலில் எந்த வெளிப்படையான காயங்களும் தென்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தூக்கில் தொங்கியதால் உடலில் ஆக்ஸிஜன் இல்லாமல் இறப்பு ஏற்பட்டுள்ளது. அவரது நகங்களும் தூய்மையாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவரது இறப்பில் எந்தவித நாடகமும் இல்லை, அது தற்கொலைதான் என உடற்கூறு ஆய்வு அறிக்கை தெளிவுபடுத்தியது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் சிங் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அன்றைய தினத்திலேயே அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச்செல்லப்பட்டது.
உடற்கூறு ஆய்வில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று உறுதியானாலும் பாலிவுட் நடிகர் ஷேகர் சுமன் #justiceforSushantforum என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சுஷாந்த் மரணத்திற்கான காரணம் குறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். தற்போது #CBIEnquiryForSushant என்ற ஹேஷ்டேக்கை சுஷாந்தின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க... சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை: சக நடிகர், நடிகைகள் கோரிக்கை