செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. இதில் வேலா ராமமூர்த்தி, இளவரசு, பொன்வண்ணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் மே31ஆம் தேதி திரைக்கு வருகிறது.
யுவன் - செல்வா கூட்டணிக்கு என்றே தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகி சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு இந்தியாவிலேயே பெரிய கட் டவுட் வைக்க சூர்யா ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சூர்யாவுக்கு 215 அடியில் கட் அவுட் வைப்பதற்கான பணியில் சூர்யா ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு 190 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், சூர்யா ரசிகர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.