டிஜே ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் - பிரியா ஆனந்த் நடிப்பில், 2017ஆம் ஆண்டு வெளியானப் படம் 'கூட்டத்தில் ஒருவன்'. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இவர் பழங்குடியின மக்கள் பற்றிய புதிய படத்தை இயக்கிவருகிறார்.
இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில், நடிகர் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொடைக்கானலில் நடைபெற்ற படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.