ETV Bharat / sitara

கூகுள் தேடல்: 'சூரரைப் போற்று' படத்தின் அசாத்திய சாதனை! - soorarai pottru film highly searched on google

சென்னை: கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 'சூரரைப் போற்று' திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

soorarai pottru highly searched film on google

author img

By

Published : Dec 11, 2020, 2:18 PM IST

ட்விட்டர் டிரண்டிங்கைத் தொடர்ந்து கூகுள் தேடலிலும் 'சூரரைப் போற்று' திரைப்படம் அசாத்திய சாதனைப் படைத்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 12ஆம் தேதி வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட, இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்த இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன் பணிபுரிந்திருந்தார்.

இந்தப் படம் வெளியான முதலே, திரையுலகப் பிரபலங்கள், விமர்சகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவருடைய பாராட்டையும் பெற்றது. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமன்றி, இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பலருமே படத்தைப் பார்த்துப் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பலரும் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்யவே, #SooraraiPottru என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2020ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகப்படியாக ட்வீட் செய்யப்பட்ட படங்களின் ஹேஷ்டேக்குகளில் 2ஆவது இடத்தைப் இத்திரைப்படம் பிடித்துள்ளது. இதனை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்சூழலில் 2020ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 'சூரரைப் போற்று' இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனைப் புரிந்துள்ளது. இதனால் படக்குழு படுகுஷியாகியுள்ளதாம்.

இதையும் படிங்க... 10 லட்சம் லைக்குகளை அள்ளிய சிவகார்த்திகேயனின் பாடல்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.