'கூட்டத்தில் ஒருவன்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'ஜெய் பீம்'. சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இப்படத்தில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் 1993ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இதில் சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவர் நீதிபதியாக, இருந்தபோது நடந்த வழக்கில் பழங்குடி பெண்ணிற்கு நீதி பெற்றுத் தந்ததை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வரும் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
-
It’s time to show the power of truth and faith!!
— Suriya Sivakumar (@Suriya_offl) October 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tamil - https://t.co/NIYWLfwvt0
Telugu - https://t.co/RX7She2No1
⁰Watch #JaiBhimOnPrime Nov. 2 on @PrimeVideoIN
">It’s time to show the power of truth and faith!!
— Suriya Sivakumar (@Suriya_offl) October 22, 2021
Tamil - https://t.co/NIYWLfwvt0
Telugu - https://t.co/RX7She2No1
⁰Watch #JaiBhimOnPrime Nov. 2 on @PrimeVideoINIt’s time to show the power of truth and faith!!
— Suriya Sivakumar (@Suriya_offl) October 22, 2021
Tamil - https://t.co/NIYWLfwvt0
Telugu - https://t.co/RX7She2No1
⁰Watch #JaiBhimOnPrime Nov. 2 on @PrimeVideoIN
சமீபத்தில் 'ஜெய் பீம்' டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் இன்று (அக்.22) ஜெய் பீம் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இதில் சூர்யா, அநீதி இழைக்கப்படும் பழங்குடியின மக்களுக்கு நீதி வாங்கி தர போராடும் காட்சிகள் விறுவிறுப்பாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் நீதிமன்றத்தில், "அநீதிக்கான நீதிமன்றத்தின் மெளனம் ஆபத்தானது...போராடுவதற்குச் சட்டம் ஒரு ஆயுதம்" என சூர்யா பேசும் வசனங்கள் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
'ஜெய் பீம்' படத்திற்குத் தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் விதமாக 'ஜெய் பீம்' நவம்பர் 2ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
கடந்தாண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் விதமாக சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது குறிப்பிடத்தக்கது.