நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
சி.சு. செல்லப்பா எழுதியக் கதையை அடிப்படையாக வைத்து உருவாகும் இப்படம் ஜல்லிக்கட்டு போட்டியை விவரிப்பதாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக சூர்யாவின் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. லேசான தாடி, நீளமாக வளர்த்துள்ள முடியை படிய சீவியிருக்கும் இவரது தோற்றம், ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'மகா சமுத்திரம்' படத்தில் இணைந்த சிவாகார்த்திகேயன் பட நடிகை!