ETV Bharat / sitara

ரிலீசுக்கு முன்னரே ஆன்லைனில் லீக்கான 'சூரரைப் போற்று!' - ரிலீசுக்கு முன்பே லீக்கான சூரரைப் போற்று

நேரம் மாற்றம் காரணமாக இந்தியாவில் வெளியாவதற்கு முன்னரே வெளிநாடுகளில் ரிலீசான 'சூரரைப் போற்று' படம் உடனடியாக பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் லீக்கானது.

Suriya in soorarai pottru
சூரரைப் போற்று படத்தில் சூர்யா
author img

By

Published : Nov 12, 2020, 9:14 AM IST

சென்னை: நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு முன்னரே சில ஆன்லைன் தளங்களில் லீக்கானது.

தீபாவளி ஸ்பெஷலாக சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று (நவ. 11) காலை முதலே படம் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது ஆவலை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

இதுபோன்ற எதிர்பார்ப்பு மிக்க படங்களை ரிலீஸ் நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னரே வெளியிடுவதை பல ஓடிடி தளங்கள் வழக்கமாக கடைப்பிடித்து வந்தன. அந்த வகையில் 'சூரரைப் போற்று' படமும் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு முன்பாக வெளிவந்துவிடும் என ரசிகர்கள் காத்திருக்கையில் சுமார் 8 மணியிலிருந்து பல்வேறு ஆன்லைன் தளங்களில் இப்படம் வெளியாகியது.

நேரம் மாற்றம் காரணமாக இந்தியாவுக்கு முன்னரே, பல்வேறு வெளிநாடுகளில் படம் ரிலீசான நிலையில், உடனடியாக லீக்கும் செய்யப்பட்டது. இதன் பின்னர் அமேசான் ப்ரைமில் படம் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

'சூரரைப் போற்று' படத்தை வீட்டில் இருந்தபடியே பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருப்பதாகவும், திரையரங்குகளில் பார்க்க முடியாமல் மிஸ் செய்துவிட்டோமே என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அத்துடன் இயக்குநர்கள் கே.வி. ஆனந்த், பாண்டிராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

  • #SooraraiPottru it's a new experience. every character in d film is soul touching.@Suriya_offl sir performance out standing.Sudha mam ,I can see the hard work in every frame .@gvprakash music is one a kind.this gonna be Visual treat for this diwali .al d best @2D_ENTPVTLTD & team

    — Pandiraj (@pandiraj_dir) November 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா, 'மாறா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த நிலையில், தற்போது படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவாக வரக்கூடும் எனக் கருதியும் இந்தப் படத்தை ஓடிடி-இல் வெளியிடப்போவதாக சூர்யா அறிவித்திருந்தார். அதன்படி அக்டோபர் 30ஆம் தேதி படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படம் திரையரங்குகளில் வெளியானால்தான் நல்ல வசூல் பெற முடியும் என்று கூறப்பட்டது.

ஆனால், 'சூரரைப் போற்று' படத்தை ஓடிடி-இல் வெளியிடுவதில் உறுதியாக இருந்தார், சூர்யா. இதற்கிடையே விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், படத்தில் வெளியீடு அக்டோபர் 30ஆம் தேதியிலிருந்து நவம்பர் 12ஆம் தேதிக்கு மாறுதல் ஆனது.

இதைத்தொடர்ந்து தற்போது படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுடன், திரையரங்குகளில் பார்க்காமல் மிஸ் செய்துவிட்டோமே என்று பலரும் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே, கரோனா அச்சம் குறைந்த பின்னர் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜமெளலிகாரு... அதலாம் பண்ணமுடியாது: ராம் கோபால் வர்மா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.