உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல துறைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் இருந்து திரைத்துறையும் தப்பவில்லை. திரைத்துறையையே நம்பி பல குடும்பங்கள் உள்ள நிலையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் ஃபெப்சியில் (FEFSI) பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கரோனா காரணமான பணி நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே. செல்வமணி, நடிகர், நடிகைகளை ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ முன்வருமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், சூர்யாவும் கார்த்தியும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கியிருகின்றனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க... திரைப்பட தொழிலாளர்கள் பாதிப்பு - உதவி கேட்கும் ஃபெப்சி தலைவர்