ETV Bharat / sitara

படப்பிடிப்பில் பங்கேற்ற சூர்யா - மனநிறைவாக இருப்பதாக ட்வீட்

author img

By

Published : Mar 18, 2021, 3:39 PM IST

சென்னை: இயக்குநர் பாண்டியராஜ் இயக்கிவரும் 'சூர்யா 40' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா இன்று (மார்ச் 18) கலந்துகொண்டார்.

Suriya
Suriya

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் சூர்யாவின் 40ஆவது படமாகும். எனவே தற்காலிகமாக 'சூர்யா 40' எனப் படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. அப்போது சூர்யா கரோனா தொற்று காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துவந்தார். அதனால் சூர்யா இல்லாத இதர காட்சிகள் படமாக்கப்பட்டுவந்தன.

இதனையடுத்து இன்று (மார்ச் 18) இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொண்டுள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா 'மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றது மனநிறைவாக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா - பாண்டிராஜ் படத்தின் ரிலீஸ் எப்போது...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.