ETV Bharat / sitara

'சூர்யா 39' அப்டேட்: 'ஜெய்பீம்' வக்கீலாக தோன்றும் சூர்யா

author img

By

Published : Jul 23, 2021, 5:47 PM IST

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு 'ஜெய்பீம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

suriya
suriya

சென்னை: 'சூரரைப் போற்று' வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, பாண்டியராஜ் இயக்கும் 'எதற்கும் துணிந்தவன்', வெற்றிமாறனின் 'வாடிவாசல்', '#சூர்யா 39' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இன்று (ஜூலை.23) தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூர்யாவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் '#சூர்யா 39' படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளன. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'ஜெய்பீம்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

படத்தின் போஸ்டரில் சூர்யா வக்கீலாக தோன்றியுள்ளார். இக்காட்சி ஏழை, எளிய மக்களுக்கு நீதி வாங்கித் தருவது போன்று உள்ளதாக சமூக வலைதளவாசிகள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ் சமூகத்தின் இதய துடிப்பு சூர்யா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.