உலக நாயகன் கமல் ஹாசனின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

அக்ஷரா தமிழில் அஜித் நடித்த விவேகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் அவரது சகோதரி சுருதி ஹாசன் சமூக வலைதளத்தில் அக்ஷராவுக்கு வாழ்த்துத் தெரிவித்து இருவரும் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்ஷரா ஹாசன். நீ என் செல்லம். நீ எங்களுக்காகச் சேமித்துவைத்திருக்கும் அனைத்தையும் நினைத்து நான் மிகவும் உற்சாகமடைகிறேன். நான் உன் அக்காவாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி" எனப் பதிவிட்டுள்ளார். HBD அக்ஷரா ஹாசன்
