ETV Bharat / sitara

'தர்பார்' - 'தலைவர் 168' - ரஜினியை ஆக்கிரமிக்கும் சன் டிவி

author img

By

Published : Dec 18, 2019, 1:34 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

darbar
darbar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. காவல்துறை அதிகாரியாக நீண்ட் காலத்துக்குப் பிறகு ரஜினி நடித்துள்ள இந்தப்படத்தில், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த திங்கள்கிழமை இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. தர்பார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி, 9ஆம் தேதி வெளியாகும் நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி கைப்பற்றியுள்ளது.

மேலும், ரஜினிகாந்த்-சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் 'தலைவர் 168' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இதன் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இன்று முதல் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் திரைப்படங்களை தொடர்ந்து குறிவைத்துவரும் சன் குழுமம் தற்போது அவரது மருமகனும் நடிகருமான தனுஷின் புதிய படத்தையும் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

டொவினோவின் 'கிலோ மீட்டர் & கிலோ மீட்டர்' - பர்ஸ்ட் லுக் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.