இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் மிஸ்டர்.லோக்கல். காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர் மதுபாலா ஆகியோர் நடித்துள்ளனர். காமெடிப் படமாக எடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த எம்.ராஜேஷ் ரஜினி பட பாணியில் சிவகார்த்திகேயனை பஞ்ச் டயலாக்குகள் பேச வைத்து அசத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் வருகின்ற மே 17ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்.டிவி பெற்றுள்ளதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத சோகத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தை பெரிதும் நம்பியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.