சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. ரஜினியின் அண்ணாத்த, சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட், தனுஷின் திருச்சிற்றம்பலம் என வரிசையாக தன்வசம் முக்கிய கதாநாயகர்களின் படங்களை வைத்துள்ளது.
இதில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை நவம்பர் இறுதியில் அல்லது கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் வலிமை படத்துடன் சூர்யாவின் இந்த படத்தை வெளியிட திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் பீஸ்ட் படத்தை பொங்கலுக்கு வெளியிடுகின்றனர். அதனை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை பிப்ரவரியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் அன்று தங்கள் படத்தை வெளியிடுவதன் மூலம் அதிகமாக கல்லா கட்டலாம் என சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. ஒரு படம் தப்பினாலும் மற்ற படம் அதை ஈடுகட்டும் என தயாரிப்பு தரப்பு எண்ணியுள்ளதாம்.
இதையும் படிங்க: சரத்குமாரின் சமரன் பூஜையுடன் தொடக்கம்!