ETV Bharat / sitara

அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவாவின் 'சுமோ' ஓ அப்ப வருதா...!

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிவரும் 'சுமோ' படம் வெளியாகும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

author img

By

Published : Aug 16, 2019, 3:23 PM IST

sumo

'பிப்ரவரி 14', 'ஆயிரம் விளக்கு' படங்களை இயக்கிய ஹோசிமின் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் 'சுமோ' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு மிர்ச்சி சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ', சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும். ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில், சுமோ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Intro:மிர்ச்சி சிவா நடிக்கும் சுமோBody:வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'சுமோ'

'வணக்கம் சென்னை' படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் "சுமோ". எஸ் .பி ஹோசிமின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். ஜப்பானில் 35 நாட்கள் படபிடிப்பு நடத்தி பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் யோகி பாபு நடித்துள்ளனர் இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் Conclusion:நவம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.