ETV Bharat / sitara

'என் தயாரிப்பு எப்போ, எங்கே விற்பனை செய்யணும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்' - எஸ்.ஆர்.பிரபு - karthi upcoming movie

கார்த்திக்கின் 'சுல்தான்' ஓடிடியில் வெளியிடுவதன் விவகாரம் குறித்து, அப்படத்தினை தயாரித்த எஸ்.ஆர். பிரபு, 'எனது படத்தை எப்போது எங்கே விற்பனை செய்வது என நான்தான் முடிவு செய்வேன்' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுல்தான் படம்
சுல்தான் பட ரிலீஸ் விவகாரம் தயாரிப்பாளர் காட்டம்
author img

By

Published : Mar 21, 2021, 4:59 PM IST

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' படம், ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தினை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் 'ஹாட் ஸ்டார்' ஓடிடியிலும் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், 'தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களைக் குறைந்தது 45 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் செய்யவோம் என்ற கடிதம் தர வேண்டும்' என்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.

இந்நிலையில் "என் தயாரிப்பை எப்போ, எங்கே விற்பனை செய்யணும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்'' என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு காட்டமாக தெரிவித்து இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: "மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.