தமிழ் திரையுலகில் 80களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் சுஹாசினி. இவர் கடந்த 15ஆம் தேதி தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
![சுஹாசினி பிறந்தநாள் விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12817526_sushaini-3.jpg)
இதன் தொடர்ச்சியாக சுஹாசினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று (ஆக.18) கமல் ஹாசன் வீட்டில் நடைபெற்றது. அதில், 80ஸ் காலகட்டத்தில் முன்னணி பாத்திரங்களில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
![சுஹாசினி பிறந்தநாள் விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12817526_sushaini-4.jpg)
ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், மோகன், அம்பிகா, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல்ல ட்விட்டர், இப்போ இன்ஸ்டா... சோகத்தில் கங்கனா!