தமிழ்நாடு அரசு கரோனா விழிப்புணர்வு விளம்பரப் படங்களை தயாரித்து, பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது. அதேபோல் அரசின் உயர்நிலை அலுவலர்கள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை சில திரைப்பட ஹீரோக்கள், ஹீரோயின்கள், நகைச்சுவை நடிகர்களையும் வைத்து, 'கட்டில்' திரைப்பட இயக்குநரும் ஹீரோவுமான இ.வி.கணேஷ்பாபு விளம்பரப் படங்களை
இயக்கி வருகிறார்.
இவர், தற்போது நடிகை சுஹாசினியை வைத்து இயக்கியுள்ளார். இதுகுறித்து கூறுகையில், 'காவல் அரணாக செயல்பட்டு கரோனாவில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் களவீரர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தி, சுஹாசினியை வைத்து இயக்கி உள்ளேன். இந்த விழிப்புணர்வு படம் இப்போது மக்களிடம் பரவலாக சென்றடைந்து வருகிறது.