ETV Bharat / sitara

‘சூபியும் சுஜாதையும்’ இயக்குநர் ஷாநவாஸ் உயிரிழப்பு! - 'Sufiyum Sujathayum' director Naranipuzha Shanavas news in Tamil

கோவை: மலையாள திரைப்படமான ‘சூபியும் சுஜாதையும்’ இயக்குநர் ஷாநவாஸ் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

‘சூபியும் சுஜாதாவும்’ இயக்குனர் மூளைச்சாவு! அல்லது ‘சூபியும் சுஜாதாவும்’ இயக்குனர் ஷாநவாஸ் உயிரிழப்பு!

author img

By

Published : Dec 23, 2020, 3:07 PM IST

மலையாள திரைப்பட துறையில் எடிட்டராக கால் பதித்த ஷாநவாஸ் சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக 'கரி' என்ற படத்தை இயக்கினார். பின்னர் இவர் இயக்கிய ‘சூபியும் சுஜாதையும்’ படமானது கரோனாவால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, இயக்குநர் ஷாநவாஸ் அவரது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில் இருந்த போது, கடந்த சனிக்கிழமை (டிச. 19) இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவையில் உள்ள கேஜி தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவந்தது.

கேஜி தனியார் மருத்துவமனை
கேஜி தனியார் மருத்துவமனை

இந்நிலையில், இன்று (டிச. 23) காலை ஒன்பது மணியளவில் ஷாநவாஸ் உயிரிழந்தார். இதில் இயக்குனர் ஷாநவாஸிற்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரை நினைவுகூர்வோம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.