சென்னை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றியுள்ளார். குறிப்பாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
‘என்னை அறிந்தால்’, ’ஜில்லா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சில்வா, தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது புதிய படம் ஒன்றை சில்வா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இயக்குநர் விஜய் கதை, திரைக்கதை எழுதவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநராகும் ஸ்டண்ட் சில்வா! - இயக்குநர் விஜய்
‘என்னை அறிந்தால்’, ’ஜில்லா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சில்வா, தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.