'பாகுபலி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கும் திரைப்படம் RRR. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் இத்திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பத்து மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரே ஸ்டிவன்சன், ஒலிவியா மோரிஸும் படக்குழுவில் இணைந்துள்ளனர். பிரமாண்டத்திற்கு பெயர் போன ராஜமௌலியின் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'படத்திற்காக கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை நிஜ வாழ்விலும் தைரியம் கொடுத்தது'