சென்னை: மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் 'சம்பவம்'.
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் , நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா , சிருஷ்டி டாங்கே, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, 'மொட்டை' ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நேர்மையுடன் வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதை விறுவிறு ஆக்ஷன் பாணியில் 'சம்பவம்' படம் கூறுகிறது.
சென்னை டூ கடலூர் வரை ஒரேநாளில் நடக்கும் சம்பவங்கள் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.