டிடிஎஸ் தொடர்பான குறைகளைக் தீர்க்க நடவடிக்கை எடுத்த மத்திய நிதியமைச்சருக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகளை சந்தித்து, திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு வருமான வரி பிடித்ததில் நடப்பில் உள்ள பகிர்மான விகிதாச்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துரைக்கும் நினைவுப் பத்திரத்தை பெற்றுக்கொண்டு, கருத்துகளையும் கேட்டு தெரிந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி.
தற்போதுள்ள நடைமுறையில் சில முக்கிய குறைகள் இருப்பதை புரிந்துகொண்ட நிதி அமைச்சர், உடனடியாக அதைத் தீர்க்கும் விதமாக திரைப்படத்துறையை உள்ளடக்கிய சிறப்புக் குழு அமைத்திட உத்தரவிட்டார். இந்தக் குழு திரைப்படத்துறையில் உள்ள குறைகளைக் களைய தேவையான விஷயங்களை விவாதித்து, தேவையானத் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - சிறைகளுக்குக் கட்டுப்பாடு