இன்று நாடு முழுவதும் நான்கு சுவர்களுக்குள் முடங்கி இருக்கும் காரணம் கரோனா தொற்றினால்தான். இதன் விளைவாக ஏழை மக்கள் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் உணவுக்காக தவித்துவருகின்றனர்.
திரை பிரபலங்களும் இதுபோன்ற அசாதாரண சுழலில் தங்கள் உயிரை பணையம் வைத்து உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்காகவும், துப்புரவுப் பணியாளர்களுக்காகவும் தங்கள் ஆதரவை தெரிவித்து வீடியோ வெளியிட்டுவருகின்றனர்.
இதற்கிடையில் பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியமும், கவிஞர் வைரமுத்துவும் இணைந்து கரோனா தொற்றை எதிர்த்து இரவு பகல் பாராது பணியாற்றிவரும் மருத்துவர்களுக்காகவும், கரோனா விழிப்புணர்வுக்காகவும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
எஸ். பி. பி பாடலை இசையமைத்து பாடியுள்ள நிலையில், பாடலுக்கு வரிகளை கோர்த்து தொடுத்திருக்கிறார் வைரமுத்து. தற்போது இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க... 43 ஆண்டுகள், 32 தேசிய விருதுகள், ஒரு ஆஸ்கர் - சத்யஜித் ரே சில சுவாரஸ்யக் குறிப்புகள்