மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தல் 2019-2022ஆம் ஆண்டிற்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது. மொத்த உறுப்பினர்களான மூவாயிரத்து 644 பேரில், மூவாயிரத்து 171 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நடிகர்கள், நடிகைகள் தங்களது வாக்குகளை பதிவு செய்துவரும் நிலையில் தற்போது நடிகர் விஜய் வருகை தந்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. சக நடிகர்களை சந்தித்துப் பேசிய விஜய் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
விஜய் வாக்களித்துவிட்டு சென்றுள்ள நிலையில், நடிகர் அஜித் எப்போது வாக்களிக்க வருவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.