ETV Bharat / sitara

அட்ரா சக்க... திரையரங்குகளில் வெளியாகும் சூரரைப் போற்று?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது.

சூரரைப் போற்று
சூரரைப் போற்று
author img

By

Published : Aug 26, 2021, 1:49 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகி மெகா ஹிட்டித்த படம் ’சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மீது அதிருப்தியில் இருந்தனர். ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்கு இப்படமும் முதன்மை காரணமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், 'சூரரைப் போற்று' திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று படத்தின் தயாரிப்பு நிறுவனமும், திரையரங்கு உரிமையாளர் சங்கத்திடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் அப்படி திரைப்படம் வெளியானால், வசூல் முழுவதையும் திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர் சங்கம் பகிர்ந்துகொள்ள (Free Distribution) 2டி நிறுவனம் முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை முடிவடைந்தால், இந்த வாரமே 'சூரரைப் போற்று' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'பாக்ஸிங்கை விட ரத்த பூமி' - வாத்தியருக்கு அட்வைஸ் கொடுத்த கபிலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.